1950 என்ற தொலைபேசி எண் மூலம் வாக்காளர் விவரங்களை அறியலாம்; ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து கல்லூரி மாணவர்கள், கிராம மக்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு பற்றி ஓரிரு நாளில் அறிவிப்பு

- மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்


 ஏற்கெனவே வாக்காளர்களின் உதவிக்கு இலவச அழைப்பு எண் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அது வேறுபட்டிருந்ததால் நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவர திட்டமிடப்பட்டது. எனவே, 1950 என்ற இலவச எண் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் 1950 என்ற எண்ணை அழுத்தி உதவி பெறலாம். பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்தந்த ஊர் எஸ்.டி.டி. கோட் நம்பருக்குப் பின் 1950 என்ற எண்ணை பதிவிட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது