டிஜிட்டல்
மயமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் கல்வி துறையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து
வருகிறது . கரும்பலகையில் எழுதி வந்த காலம் குறைந்து இப்போது “Smart Class” என்ற
நுட்பம் பெரும்பாலான இடங்களில் பரவலாக இருந்து வருகிறது .
அதையும்
தாண்டி இப்போது கரும்பலகையையே டிஜிட்டல்
தொழில் நுட்பம், “Scribit” என்ற புதிய
பரிமாணத்தை அடைய செய்துள்ளது.
Scribit:
- பலகைகள் , சுவர்கள் என எந்த சமதள பரப்பிலும் எழுத்து மற்றும் படங்களை அசத்தலாக வரையும் திறன் கொண்டது இந்த Device. Computer அல்லது Mobile Phone (Android etc...) செயலி (Application) வழியாக இந்த கருவியை இயக்க முடியும் .
- எழுத வேண்டிய , வரைய வேண்டிய படங்களை அதில் பதிந்து விட்டால் அப்படியே கரும்பலகையில் வேகமாக எழுதி விடும் .
- இடமும் வலமுமாக வேகமாக இயங்கும் இந்த கருவி எழுதி அழிக்ககூடிய மை நிரப்பிய நான்கு வண்ண எழுதுகோள்களால் பொருத்தப்பட்டுள்ளன . இதிலேயே அழிப்பானும் இருப்பதால் எழுதியதை அழித்து புதிய எழுத்துக்களை எழுத முடியும் .
- இரண்டு ஆணி அடிச்சு இந்த கருவியை கரும்பலகையுடன் எளிதில் பொருத்தி விட முடியும் . வகுப்பில் ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கப் போகும் இந்த கருவியின் விலை ரூ.16ஆயிரம் .

0 Comments