நடைபெறவுள்ள மார்ச் 2019, எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுக்கான தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்துப் பாடங்களுக்கான முகப்புத்தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்து முகப்புத்தாட்கள் பெறாத / சேதமடைந்திருந்த / பார்கோடு விடுபட்ட (றுiவாடிரவ க்ஷயசஉடினந ) முகப்புத்தாட்கள் ஆகியவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு 04.03.2019 க்குள் தெரிவித்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேர்வு மையத் தலைமை ஆசிரியரிடமிருந்து மேற்காண் விவரங்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்விஅலுவலர்கள், இணையதளம் மூலம் 05.03.2019 - 06.03.2019 -க்குள் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. சில தொழிற்நுட்பக் கோளாறுகள் காரணமாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் பதிவேற்றம் செய்வதற்கான இணையதளம் செயல்பாட்டில் இல்லாத காரணத்தினால் 06.03.2019 பிற்பகல் முதல் 08.03.2019 வரை பதிவேற்றம் செய்வதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
0 Comments